பொங்கல் வாழ்த்துக்கள் 2023


அன்பு நண்பர்களே...
 வணக்கம்...

      நமது குழுவில் பயணிக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

 நமது குழுவில் சிறிய சிறிய புது முயற்சிகளோடு உருவானது தான் இந்த தளம்.

இந்த தளத்தில் உங்களுக்கு சில விஷயங்கள் புதிதாக கிடைக்கலாம் முயன்று பாருங்கள்.

 இன்று போலவே என்றும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நாம் ஒன்றாக பயணிக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம் .உங்களின் விருப்பமும் அதுவாகவே இருக்கட்டும்.

அவ்வப்போது இந்த தளத்தை பார்வையிடுங்கள் உங்களுக்கு இந்த தளத்தின் மூலமாக புதிய விஷயங்கள் கிடைக்கலாம். நன்றி.
                                         Admins, FPBL-WN

உங்கள் ரசனைக்கு....
  இந்த இனிய பொங்கல் திருநாளில் நமது குழுமத்தில் ஒன்றான 'கவி சோலை' குழுவில் சில கவிஞர்கள் வடித்த கவிதை கீழே கொடுக்கிறோம் ரசித்துப் பாருங்கள். நன்றி.


கவிஞர்.கேலோமி , மேட்டூர், சேலம் மாவட்டம்
தமிழ்நாடு 

கவிதை 1

தை மகள்
தை
தை
தித்தித் தை
தித்திக்கும்
தை
மஞ்சள்
மனை
மாட்சி
செல்வம்
கரும்பு
இனிப்பு
அதன்
நினைப்பு
தணிப்பு
அனைத்தும்
தரும்
தமிழரின்
எளிதில்
கடத்தி
இந்த
திருநாள். 
தமிழரின்
மரபில்
நினைவில்
புத்தியில்
சிந்தனையில்
உழவில்
அது
சிந்திய
உப்பு
வியர்வையில்
மீட்டிய
செங் குருதியின்
திமிலில்
பூட்டிய
உழவு
இரதத்தில்
கட்டிய
காளைகளின்
கம்பீரத்தில்
ஜல்லிகட்டின்
சீற்றத்தில்
தமிழரின்
வாழ்வியல்
உலகத்தோருக்கு
ஓர்
அரிதில்
கடத்தி. 
அதன்
கம்பீரம்
மானம்
சூடு
சுரணை
ஆதி
முதல்
தமிழரின்
வாழ்வியலில்
கலந்த
ஒன்று. 
அதனை
உணர
திமிர
பயில
தமிழ்
உயிரில்
கலந்த
தமிழ்நாடானாக
பிறந்து
பார்
தெரியும்
அதன்
கம்பீரம். 
உலகம்
போற்றும்
தை
மகளுக்கு
தமிழ்
மண்ணின்
வீர
தீர
சூர
மான
வாழ்த்துக்கள். 
வணக்கங்கள். 


கவிதை 2

தைத்திருநாள்
வாழ்வில்
உயர் நாள். 
அன்பும்
கருணையும்
சகல
உயிர்களின்
ஜீவாதாரம்.
மண்
மனை
மாடு
செல்வம்
என
மகிழ்ந்திருக்க
தை
திருமகள்
நாடி
வருகிறாள். 
சூரியன்
சுபிட்சத்தை
தரட்டும்.
ஆதவன்
அவன்
மாதவன். 
வருகையால்
நெஞ்சம்
சர்க்கரை
பொங்கலாக
மஞ்சள்
முகமாக
அன்பு
கரும்பு
சாறு
போல்
உயிர்க்கட்டும்.
வாழும்
நூற்றாண்டில்
மண்ணில்
விண்ணில்
உள்ள
எண்ணிலி
உயிர்கள்
சுதந்திரமாக
பாதுகாப்பாக
தன்
வாழ் நாட்களை
உயிரோட்டமாக
வாழட்டும்... கேலோமி🌹
மேட்டூர் அணை
சேலம் மாவட்டம். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹👍
கேலோமி🌹🌹🌹🌹
மேட்டூர் அணை. 
சேலம் மாவட்டம்.

🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹


கவிஞர் சாந்தி குமரன்
சென்னை

கவிதை 1

தைத்திருநாள் வாழ்த்துக்கள் 🎋🎊🎉
***************************

தை,தை என சலங்கை அணிந்து அழகாக ஆடிவரும் தைமகளை,தமிழ்திருமளை வரவேற்று அவளுக்கு சர்க்கரை பொங்கலும்,வெண்பொங்கலும் அறுசுவையுடன் படைத்து ,அவளுடன் பொங்கலோ பொங்கல் என உரக்க கூறி உளம் மகிழ்ந்திடுவோம் நாம் அனைவரூம் 🙏👍

அனைத்து இருபால் மெய்யன்பர்களுக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் 🎋☀️💐💐💐💐💐💐💐💐

கவிதை2

தைத்திருநாள் வாழ்த்துக்கள் 🎋🎊🎉
***************************

தை,தை என சலங்கை அணிந்து அழகாக ஆடிவரும் தைமகளை,தமிழ்திருமளை வரவேற்று அவளுக்கு சர்க்கரை பொங்கலும்,வெண்பொங்கலும் அறுசுவையுடன் படைத்து ,அவளுடன் பொங்கலோ பொங்கல் என உரக்க கூறி உளம் மகிழ்ந்திடுவோம் நாம் அனைவரூம் 🙏👍

அனைத்து இருபால் மெய்யன்பர்களுக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் 🎋☀️💐💐💐💐💐💐💐💐

இவள்,சாந்தி குமரன் 🙏




இவள்,சாந்தி குமரன் 🙏


🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹



கவிஞர். ஆனந்த் கந்தசாமி
சேலம்...

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்...

"மாவிலைக் கட்டி 
மாக்கோலம் இட்டு, 
முச்செங்கல் பூட்டி 
மண்பானை வைத்து, 
பக்குவங்கள் காட்டி
மஞ்சள் கொத்தோட,
மாமரத்து இலையோடு
இஞ்சித் தண்டோடு
எறும்பூரும் கரும்போடு
வட்டப் புதுப்பானை
வாயெல்லாம் பால் 
பொங்கப்பட்டு புதுச்சோறு
பொங்கிவரும் பொங்கலிது...



தமிழர் திருநாளாம்
தைப்பொங்கல் 
மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்களுடன்.....
ஆனந்த் கந்தசாமி
சேலம்...

🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹


கவிஞர்.கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன்
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் - 638052
ஈரோடு மாவட்டம்


கவிதை 1

தமிழர் திருநாள்
********************
தைத் திருநாளே
வருக வருகவே ...
தமிழர் திருநாளே
வருக வருகவே ...
உழவர்கள் போற்றும்
உன்னத நன்நாளே
வருக வருகவே ...
கதிர் விளையச்
செய்யும் கதிரவனுக்கு
நன்றி சொல்லி ...
பொங்கலிட்டு...
செங்கரும்பு , 
மஞ்சள் கிழங்கு
வைத்து ...மங்கலமாய்
வரவேற்றோம் ...
கதிரவனே உன்
வரவு நல்வரவு
ஆகுகவே ...
🙏 வணக்கம் 🙏 வணக்கம்🙏
செஞ்சுடர் கதிரவனே ...
இல்லமெல்லாம் ...
இனித்திருக்க !
தமிழர் உள்ளமெல்லாம்
மகிழ்ந்திருக்கச்
செய்வாய் நீயே ...
ஆதவனே ...
எவ்வுயிர்க்கும்
ஆரம்பமானவனே ...
உன் கதிர்க் கரம்
பற்றியே இவ்வுலகம்
மகிழ்ந்திடவே ...
வருக ! வருக !
செங்கதிர் செல்வனே ....
🌞🙏🌞❤️❤️❤️❤️❤️❤️❤️🌞🙏🌞




கவிதை 2 

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன்
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் - 638052
ஈரோடு மாவட்டம்


🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹



கவிஞர்-காஞ்சி மு.எ.பிரபாகரன், 
தலைமைச் செயலகம்.
சென்னை


*பொங்கல் வாழ்த்துகள்*!

எப்படி எதில் எதற்காக எதுவரை?
எண்ணிப் பார்க்கும் கால வரையறை
என்பதனை அறிந்த வாழ்க்கை தலைமுறை
எழுந்த உலகின் மூத்தகுடி வாழ்முறை 

உலகிற்குகே உயிரூட்டும் விவசாயம் தொழில்முறை
உதவிக்கு கால்நடை உற்பத்தியில் தன்னிறை
உண்டிங்கு வீரம் மருத்துவ உணவுமுறை
உடைபடாமல் காத்திந்த பண்பாட்டு விழாமுறை

அன்புஆசை நிறைவேறி இன்பம் பொங்க
அத்தனை செல்வங்களும் உடனிருக்க, தங்க
அடிக்கருப்போடு வெல்லம் முந்திரி
அரிசியை பொங்கி உன்ன பந்திவிரி

மானத்தை வீரத்தை பறைசாற்றும் வகையில்
மாண்புற கொண்டாடும் திருநாளாம் பொங்கல்
மதங்கள் அற்றத் தமிழர்களின் மகத்துவம்
மானுடம் போற்றும் உலகச் சமத்துவம்

ஈனப் பனிபோல் சாதியிருள் மதங்களும்
காணாமல் போகதினம் காலை விடியட்டும் 
சுற்றம் அனைத்தும் சுகப்பட வேண்டும் 
சூரியனைப் போலங்கே நீங்கள் சுடர்விட வேண்டும்.

-காஞ்சி மு.எ.பிரபாகரன், 
தலைமைச் செயலகம்.

🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹


கவிஞர்.வெண்பா .இரா.பாக்கியலட்சுமி
உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம்
சென்னை 


*பொங்கல் வாழ்த்துகள்...*

வேண்டா தீயவை 
வேகட்டும்
வேண்டிய நல்லன 
சேரட்டும்...

தாழ்வுகள் எல்லாம் 
இல்லாமல்
உயர் மேடாய்..,
செழிகட்டும்...

இனிப்பு செய்திகள்
எந்நாளும் 
செவிக ளிரண்டை
நிரப்பட்டும்...

இல்லம் முழுக்க வளம் 
சுரந்து 
ஈகை குணம்
மேலோங்கட்டும்...

கலைகள் எங்கும்
காத்திடுவோம்
கலைஞர்கள் வாழ்வில் 
ஒளி ஏற்றிடுவோம்...

இயற்கை நலன்களில்
இணைத்துக்கொண்டு
செயற்கை உணவை
மூட்டைக் கட்டிடுவோம்..

நெகிழி பைகள் பூமியை
மலடாக்கும்
நெசவுத் தொழிலுக்கு
கரம் கொடுப்போம்...

இன்பம் துன்பம் எது
வரினும்
இனிதென கடக்க
கற்றிடுவோம்...

அன்பை மட்டும் 
அழுக்கின்றி
பொருளுகேற்ப
பகிர்ந்திடுவோம்...

புரிதல் என்னும் கயிறை
கொண்டு
அகிலம் முழுக்க வலம்
வருவோம்....!!!


*இனிய போகி... பொங்கல் திருநாள் வாழ்த்துகள்...*


*வெண்பா .இரா.பாக்கியலட்சுமி*
உலகத் தமிழ்ப் பண்பாட்டுச் சங்கம்

🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹


*பொங்கல் நல்வாழ்த்துக்கள்*

இயற்கையை அதன் இயல்போடு 
வணங்கி வாழ்த்திய முதல் மனிதன்!

*நன்றி மறவா தமிழன் !!!*

உலகம் உயிரோடிருக்க 

உணவு நிறைந்திருக்க

 உதவிய பகலவனுக்கு  - அன்னம்
படைத்தான் 
முதல் நெற்கதிர் கொண்டு 

வணங்கி வாழ்த்திய முதல் மனிதன்!

*நன்றி மறவா தமிழன் !!!*

தாயிழந்த எவ்வுயிருக்கும் 
தன் பாலால் உயிரூட்டும் பசுவிற்கும்

மனித உழைப்போடு தோள் கொடுக்கும் காளைகளுக்கும்

மண் உயிர்த்திருக்க நஞ்சில்லா - எருவை கொடுக்கும் இவ்வினங்களுக்கும்

விழா கோலம் கண்டு 

வணங்கி வாழ்த்திய முதல் மனிதன்!

*நன்றி மறவா தமிழன் !!!*

சொந்த பந்தங்களை தேடி

உற்றார் உறவினர்களை நாடி

சுற்றும் நட்புகளை கூடி

விதவிதமான உணவுகளால் பசியாற்றி
பிரிவாற்றி

வணங்கி வாழ்த்திய முதல் மனிதன்!

*நன்றி மறவா தமிழன் !!!*

நன்றி மறவா தமிழன் 
*ச.பிரபு*

🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹🌿🌹

Admin, FPBL-WN 














Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post